Breaking News

மோட்டார் விகடன் விருதுகள் 2021... எந்த கார்/பைக்குக்கு உங்கள் வாக்கு... வெல்லப்போவது யார்?!

கிட்டத்தட்ட 2020–ன் பெரும்பகுதி லாக்டெளன் சீசனாகவே முடிந்துவிட்டது. இப்போது அவார்டு சீசன். ஏப்ரலில் விற்பனையே இல்லாதபோதும், லாக்டெளனை எல்லாம் பொருட்படுத்தாமல், BS-6 வேரியன்ட், ஃபேஸ்லிஃப்ட் ஆகியவற்றோடு போட்டி போட்டுக் கொண்டு புது கார் மற்றும் புது பைக்குகளும் வந்து குவிந்துவிட்டன. எலெக்ட்ரிக் கார் மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகளும் தங்கள் பங்குக்குப் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டன.

இந்தக் கொரோனா காலத்திலும் புதிய வாகனங்களின் டெஸ்ட் ரிப்போர்ட்டைக் கொடுக்கத் தவறவில்லை உங்கள் மோட்டார் விகடன். இப்போது அவற்றில் சிறந்த கார்/பைக் எது என்பதைத் தேர்ந்தெடுக்கும் முக்கியக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

மோட்டார் விகடன் விருதுகள் 2021
இதில் உங்கள் உதவியும் எங்களுக்கு நிச்சயம் தேவை. இந்த ஆண்டின் சிறந்த கார்/பைக் எது என்பதை தேர்ந்தெடுத்து இங்கே நீங்கள் வாக்களிக்க வேண்டுகிறோம்.
மோட்டார் விகடன் விருதுகள் தேர்வுக் குழுவின் முடிவும், உங்களின் சாய்ஸும் ஒன்றாக இருந்தால், ஆச்சர்யப் பரிசுகள் காத்திருக்கிறது.

உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய: https://bit.ly/MVAwards2021



from Latest News

No comments