Breaking News

தொடங்கியது திருவண்ணாமலை தீபத் திருவிழா... அதிகாலையில் நடந்த கொடியேற்றம்!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அண்ணாமலையார் சன்னதி அருகே 67 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தின் கிழ் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பக்தர்கள் யாருமின்றி விருச்சிக லக்கினத்தில் அதிகாலை 5.50க்கு கொடியேற்றத்துடன் இன்று விழா தொடங்கியது.

திருவண்ணாமலை தீபத் திருவிழா

கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கபடவில்லை. மேலும், பத்து நாட்களுக்கு காலை மாலை என இருவேளையும் திருக்கோயிலின் உள்ள ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா ஆகம விதிகளின்படி நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Also Read: திருவண்ணாமலை மகா தீபம் மற்றும் பரணி தீபம்... பக்தர்களுக்குத் தடை! கட்டுப்பாடுகள் என்னென்ன?

தீபத் திருவிழா நிறைவு நாளான பத்தாம் நாள் நவம்பர் 29-ஆம் தேதி அதிகாலை திருக்கோயில் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது, மகா தீபமும் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை தீபத் திருவிழா

இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி அரவிந்த், திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



from Latest News

No comments