Breaking News

பைகள் நிறைய மான் கறி, அறை முழுக்க துப்பாக்கி தோட்டாக்கள்!-கூடலூர் வேட்டைக் கும்பல் சிக்கியது எப்படி?

நீலகிரி மாவட்டத்தில் வனத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. அதிலும் குறிப்பாக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மரக்கடத்தல், துப்பாக்கிகளைக் கொண்டு வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடி வருகின்றனர். வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வேட்டைக் கும்பல்களை அவ்வப்போது கைதுசெய்து வருகின்றனர்.

வனவிலங்கு வேட்டை

காவல்துறையின் தனிப்பிரிவினரும் வனவிலங்குகள் வேட்டைக்கு எதிரான தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தேவாலா பகுதிகளில் நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல் பணியின் போது துப்பாக்கி, தோட்டாக்கள் மான் இறைச்சி போன்றவற்றை வைத்திருந்த 4 பேர் கொண்ட வேட்டைக் கும்பலை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வேட்டைக் கும்பல் சிக்கியதன் பிண்ணனி குறித்து நம்மிடம் பகிர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், ``உள்ளூர் வேட்டைக் கும்பல் உதவியுடன் கேரளாவைச் சேர்ந்த சில வேட்டைக் கும்பல் கூடலூரில் வேட்டையாடி வருவதை கண்டறிந்தோம். வேட்டையில் ஈடுபட்டு வருபவர்களை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். ரகசிய தகவலின் அடிப்படையில் நாடுகாணி பால்மேடு பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டோம்.

துப்பாக்கி தோட்டாக்கள்

சந்தேகத்திற்குரிய நபர்களான பாலகிருஷ்ணன், மைக்கேல், புஷ்பராஜ், அருண் ஆகிய நான்கு பேரையும் விசாரித்தில் அவர்கள் வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபட்டதை உறுதி செய்தோம். மேலும் அவர்களிடமிருந்து 2 பைகள் நிறைய மான் கறி, துப்பாக்கி, தோட்டாக்கள், டார்ச் லைட், கத்திகள் போன்றவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.



from Latest News

No comments