Breaking News

மாணவிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை: அக்டோபர் 14ம் தேதிக்குள் விவரங்கள் அனுப்ப உத்தரவு

தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத்தொகைத் திட்டத்துக்குத் தகுதியானவர்களின் விவரங்களை அக்டோபர் 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத்தொகைத் திட்டத்தின்படி அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சிபெறும் பட்டியலின மற்றும் பழங்குடி மாணவிகள் படிக்க உதவியாக அவர்களின் வங்கிக்கணக்கில் 3 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டது.

image

அடுத்து மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயதை எட்டியதும் திருமணமாகாமல் இருப்பின், அவர்கள் இந்தத் தொகையை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2012 முதல் 2017ம் ஆண்டு வரையான கல்வியாண்டுகளில் இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட தகுதியான மாணவிகளைக் கண்டறிந்து விவரங்களை, அக்டோபர் 14ம் தேதிக்குள் அனுப்பவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

No comments