Breaking News

700 ஆண்டுகள் பழமையான சீனசுருள் ஓவியம் - ரூ. 114 கோடிக்கு ஏலம்போக வாய்ப்பு

சீனப் பேரரசர்களுக்குச் சொந்தமான யுவான் வம்சத்தின் மாஸ்டர் ரென் ரென்ஃபா (கி.பி.1255-1327) வரைந்த இந்த இரண்டு மீட்டர் நீளமுள்ள சுருள் ஓவியம் அக்டோபர் 8 ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. இந்திய மதிப்பில் இது 114 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

image

யுவான் வம்சத்தைச் சேர்ந்த 700 ஆண்டுகள் பழமையான வர்ணம் பூசப்பட்ட புகழ்பெற்ற சுருள் ஓவியம் ஹாங்காங்கில் ஏலம் விடப்படவுள்ளது. "குடிபோதையில் ஐந்து இளவரசர்கள் குதிரை மீதேறி திரும்பி வருகிறார்கள்" என்ற தலைப்பில் உள்ள இந்த ஓவியம் சோதபி ஏலத்தில் 10 முதல் 15.5 மில்லியன் டாலருக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனப் பேரரசர்களுக்குச் சொந்தமான யுவான் வம்சத்தின் மாஸ்டர் ரென் ரென்ஃபா (1255-1327) வரைந்த இந்த இரண்டு மீட்டர் நீளமுள்ள சுருள் ஓவியம் அக்டோபர் 8 ஆம் தேதி ஏலத்திற்கு செல்லும்.

"இது 18 ஆம் நூற்றாண்டில், கியான்லாங் சக்கரவர்த்தியின் நீதிமன்ற தொகுப்பில் சேகரிக்கப்பட்ட ஒரு ஓவியமாகும். இதில் சக்கரவர்த்தி கியான்லாங், அவரது மகன் ஜியாகிங் மற்றும் குயிங் வம்சத்தின் மேலும் சில பேரரசர்களின் அரசமுத்திரைகள் இருக்கும்" என்று சோதபி ஏலக்குழுவின் ஆசிய தலைவர் நிக்கோலஸ் சோவ் கூறினார். இந்த சுருள் ஓவியம் ஐந்து இளவரசர்களையும் நான்கு உதவியாளர்களையும் காட்டுகிறது, அவர்கள் அனைவரும் குடிபோதையில் குதிரை மீதேறி திரும்பும் காட்சியில் உள்ளனர்.

image

"இந்த ஓவியம் கடைசி சக்கரவர்த்தியான பு யியின் கைகளில் இருந்தது, அவர் அதை நகரத்திலிருந்து வெளியே எடுத்து பின்னர் சந்தையில் விற்றார். பிறகு இது மேற்குலக நாடுகளில் மிக முக்கியமான பல்வேறு சேகரிப்புகளில் இடம்பெற்றது. அது இன்று எங்களுடன் உள்ளது," சோவ் மேலும் கூறினார். கிங் வம்ச கலைஞரான வாங் ஹுயின்  மற்றொரு புகழ்பெற்ற படைப்பான "தி காங்சி பேரரசரின் தெற்கு ஆய்வு சுற்றுப்பயணத்தின்" முழுமையான சுருள் ஓவியமும் சோதபியால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

யுவான் வம்ச கலைஞரான ரென் ரென்ஃபா தீட்டிய சீன கிளாசிக்கல் ஓவியமான 'குடிபோதையில் ஐந்து இளவரசர்கள் குதிரை மீதேறி திரும்பி வருகிறார்கள்” எனும் ஓவியம் 10,340,000 முதல் 15 மில்லியன் டாலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது, இது செப்டம்பர் 23, 2020 அன்று சீனாவின் ஹாங்காங் நகரத்தில் சோதேபியின் முன்னோட்டத்தின் போது காட்சிப்படுத்தப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

No comments