Breaking News

இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய தலைவராக இயக்குநர் ஷேகர் கபூர் நியமனம்

இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய தலைவராக இயக்குநர் ஷேகர் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

‘மசூம்’ (1983), ‘மிஸ்டர் இந்தியா’ (1987), ‘பேண்டிட் குயின்’ (1994) ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஷேகர் கபூர். பூலான் தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘பேண்டிட் குயின்’ சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. ‘எலிசெபத்’ (1998), ‘எலிசெபத்: தி கோல்டன் ஏஜ்’ (2008) உள்ளிட்ட சர்வதேசப் படங்களை இயக்கியுள்ளார். இவ்விரண்டு திரைப்படங்களும் சிறந்த மேக்கப் மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments