Breaking News

ஜிப்மர் மருத்துவ மேற்படிப்புகள்: மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றம்

புதுச்சேரியில் உள்ள 2021 ஜனவரி முதல் ஜிப்மரில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையில் புதிய மாற்றம் வருகிறது. அதாவது மேற்படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வு நவம்பர் 20ம் தேதியன்று நாடு முழுவதும் எய்ம்ஸ் மூலம் நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு அந்த தேர்வை ஜிப்மர் நடத்திவந்தது.

ஏற்கெனவே, ஜிப்மர் மருத்துவக் கல்வி நிலையத்தில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை முறை இந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மேற்படிப்புகளுக்கான சேர்க்கை முறையும் மாறியுள்ளது.

image

மத்திய அரசு சுகாதாரத்துறையின் உத்தரவுக்கு இணங்க வரும் 2021ம் ஆண்டு ஜனவரி முதல் எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், டிஎம் மற்றும் எம்சிஎச் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளின் சேர்க்கையானது அனைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுக்கும் பொதுவாக நடைபெறும்.

புதுச்சேரி ஜிப்மர், டெல்லி எய்ம்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர், பெங்களுரு நிம்ஹான்ஸ் மற்றும் பல நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள எய்ம்ஸ் ஆகிய மருத்துவக் கல்வி நிலையங்களுக்கு ஒன்றாக தேர்வு நடைபெறும். தகுதித் தேர்வு பற்றிய கூடுதல் தகவல்களை www.aiimsexams.org என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவ மேற்படிப்புகளுக்கு அக்டோபர் 12ம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

No comments