Breaking News

மருத்துவக் கல்லூரிகளின் ஆன்லைன் வகுப்புகள் செல்லும்: தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்

நாடு முழுவதும் கொரோனா பேரிடர் காலத்தில்‌ மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகள் செல்லும் என தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளர் ஆர்.கே. வாட்ஸ் கடிதம் எழுதியுள்ளார். ‌

அதாவது, கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக நடத்தும் வகுப்புகள் அனுமதிக்கப்பட்டதுதான். அவை செல்லுபடியாகக்கூடியது என்று கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். தியரி வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்தலாம். கொரோனா பேரிடர் முடிந்த பின்னர் கல்லூரிகள் திறக்கப்படும்போது செய்முறை மற்றும் கிளினிக்கல் பயிற்சி வகுப்புகளை சமன் செய்துகொள்ளலாம் எனவும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. 

image

வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் ‌நடத்தும்‌ ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக‌, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியதை இப்போது பொருத்திப் பார்த்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதா‌கவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 "நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்" - ராகுல்காந்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

No comments