Breaking News

`3 மாதங்களில் மாயமான 76 குழந்தைகள் கண்டுபிடிப்பு!’ -அசத்திய டெல்லி பெண் காவலர்

டெல்லியில் காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் காவலர்களுக்கு புதிய ஊக்கத் திட்டம் ஒன்றைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநில காவல்துறை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்படி, காவலர்/ தலைமைக் காவலர் பதவியிலிருக்கும் காவலர்களில் காணாமல்போன 50 குழந்தைகள் அல்லது அதற்கும் அதிகமான குழந்தைகளைகண்டுபிடிக்கிறார்களோ, அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

14 வயதுக்கும் குறைவான குழந்தைகளை (அதில், 15 குழந்தைகள் 8 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்) என்று டெல்லி காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் காணாமல்போகும் சிறார்களைக் கண்டுபிடிக்கும் வகையில் காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது இந்தத் திட்டம்.

Also Read: கொரோனா காலத்திலும் குழந்தைகள் மீது அதிகரிக்கும் பாலியல் அத்துமீறல்கள்... அரசின் கவனத்துக்கு!

இந்த புதிய ஊக்கத் திட்டத்தின் கீழ்க் காணாமல் போன 76 குழந்தைகளைக் கண்டறிந்த தலைமைக் காவலர் சீமா தாகாவுக்கு ஏ.எஸ்.ஐ-ஆகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 12 மாதங்களுக்குள் 50 குழந்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டியது இலக்காக இருந்த நிலையில், சீமா மூன்று மாதங்களுக்குள் 76 குழந்தைகளைக் கண்டுபிடித்துள்ளார்.

சீமா தாகா

அதில், 50 குழந்தைகள் 14 வயதுக்கும் குறைவானவர்கள். இந்தக் குழந்தைகளைக் கண்டறிவதற்காக இவர், பல்வேறு மாநிலங்களுக்குத் தொடர் பயணம் மேற்கொண்டுள்ளார். புதிய ஊக்கத் திட்டத்தின்கீழ் டெல்லியில் முதல் பதவி உயர்வு பெறுபவர் இவர்தான். இவரின் கணவரும் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார்.



from Latest News

No comments