Breaking News

என் விதை நீ, என் விருட்சம் நீ; எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது: சூர்யாவுக்கு இயக்குநர் வஸந்த் பாராட்டு

‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவைப் பாராட்டிக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் இயக்குநர் வஸந்த்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ஓடிடியில் இப்படம் வெளியானது. திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments