Breaking News

தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்ன? - வழிகாட்டும் நாணயம் விகடன் & அவள் விகடன்!

நாணயம் விகடன் மற்றும் அவள் விகடன் இணைந்து, ‘தங்க நகை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!’ என்கிற தலைப்பில் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது.

வருமான வரித்துறை நகை மதிப்பீட்டாளர்

ஜெம் & ஜூவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டர் (Gjttc.in) –ன் இயக்குநர் கே.சுவாமிநாதன் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார். இவர் மத்திய மாநில அரசுகளின் தங்க நகை மதிப்பீட்டாளர் மற்றும் பயிற்சியாளராக இருக்கிறார். மேலும் பதிவு பெற்ற வருமான வரித்துறை நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவர் ஈரோட்டிலுள்ள தெய்வீகம் ஜெம் & ஜூவல்லரியின் உரிமையாளர் ஆவார்.

ஜெம் & ஜூவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டர் (Gjttc.in) –ன் இயக்குநர் கே.சுவாமிநாதன்

தங்க நகை வாங்கும் போது பல விஷயங்களை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம். பின்னர் அதை அடமானம் வைக்கும்போது அல்லது விற்கும் போது சிக்கலைச் சந்திக்கிறோம். இதைத் தவிர்க்க தங்க நகை வாங்கும்போது பல விஷயங்களைக் கவனிக்கவேண்டும். அதை விளக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.

முன் பதிவு செய்ய… https://bit.ly/3pDO48b

சந்தேகம்.. விளக்கம்..!

செய்கூலி, சேதாரம், தங்க நகையின் தரம் போன்றவை பற்றிய விவரங்களையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், தங்க நகை வாங்குவது மற்றும் அடமானம் வைப்பது குறித்து உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதற்கான விளக்கத்தையும் கேள்வி – பதில் பகுதியில் பெறலாம்.

தங்கம்

நவம்பர் 30, 2020 திங்கள்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. இது ஒரு கட்டணமில்லா கருத்தரங்கு. முன் பதிவு அவசியம்.

முன் பதிவு செய்ய… https://bit.ly/3pDO48b



from Latest News

No comments