Breaking News

கரையைக் கடக்கும் நிவர் புயல் - இதற்கு முன்னர் தமிழகத்தைத் தாக்கிய புயல்கள்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள, `நிவர்' புயல், அதி தீவிரமாக உருவெடுத்து இன்று (நவம்பர் 25) இரவு, காரைக்கால் - மமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல்

`நிவர்' என இப்புயலுக்கு பெயர் சூட்டியது ஈரான் நாடு. 2004-ம் ஆண்டுக்கு முன் புயலுக்கு பெயர் சூட்டுவது நடைமுறையில் இல்லை.

Also Read: தஞ்சை: கஜா புயல் நினைவு... நிவர் புயலை அச்சத்துடன் எதிர்கொள்ளும் டெல்டா மக்கள்!

இதற்கு முன்னர் தமிழகத்தைத் தாக்கிய புயல்கள்

1994  அக்டோபர் 31 -ம் தேதி  வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல், சென்னை அருகே, 130 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. கன மழைக்கு, 60 பேர் பலியாகினர். 

2008 நவம்பர் 26 - 'நிஷா' புயல், நாகப்பட்டினம் - காரைக்கால் இடையே மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது.

2010 நவம்பர் 1 - 'ஜல்' புயல், சென்னை அருகே மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது; பாதிப்பு இல்லை.

புயல்

2011 டிசம்பர் - 'தானே' புயல் புதுச்சேரி - கடலுார் இடையே மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. குடிசை வீடுகள்,பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின.

2012 அக்டோபர் 31 - நீலம்' புயல். மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது; 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது.

2016 டிசம்பர் 12 -  'வர்தா' புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னை அருகே கரையைக் கடந்தது. 130 கி.மீ., மேல் காற்று வீசியது; 10 பேர் பலியாகினர்; 10 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்தன.

2017 நவம்பர் 30 - அரபிக்கடலில் உருவான, 'ஒக்கி' புயலால் ஏற்பட்ட கன மழையால், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.

2018 நவம்பர் 15 -  'கஜா' புயல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. மணிக்கு, 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சுமார் 20 பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. பல லட்சம் மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள், செல்போன் டவர்கள் வீழ்ந்தன. இன்றுவரை மீளாதுயரில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 25). வங்கக்கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே அதி தீவிரப் புயலாகக் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Latest News

No comments