Breaking News

`அய்யய்யோ... வரலாற்றுப் பிழை' - உளறிய எம்.எல்.ஏ-வை `அலர்ட்’ செய்த திண்டுக்கல் சீனிவாசன்

மைக்கைப் பிடித்தாலே, ஏதாவது பேசி, மக்களை சிரிக்க வைக்கும் குணம் கொண்டவர் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். சமீபத்தில் திண்டுக்கலில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தையும் தனது பாணியில் கலகலப்பாக்கினார் அமைச்சர். கூடுதலாக வேடசந்தூர் எம்.எல்.ஏ பரமசிவமும் அமைச்சருடன் சேர, பொதுக்கூட்டம் கலைகட்டியது என்றே சொல்லலாம்.

எம்.எல்.ஏ பரமசிவம்

Also Read: ஆத்தூர், வேடசந்தூர், ஆண்டிப்பட்டி, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம்

கூட்டத்தில் பேசிய வேடசந்தூர் எம்.எல்.ஏ பரமசிவம், ``வரும் சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க ஹாட்ரிக் வெற்றிபெறும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த மதத்தினரையும் இழிவுபடுத்தியதில்லை. ரம்ஜான், கிருஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கு வாழ்த்துசொல்லும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை. நாளைக்கு நீங்கள் முதல்வராக வரப்போக்கிறீர்கள்...” என பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் சீனிவாசன், இடைமறித்து ஏதோ சொல்ல, பதற்றமடைந்த எம்.எல்.ஏ பரமசிவம், “அய்யய்யோ... வரலாற்றுப் பிழை இழைத்துவிட்டேன். நான் டாக்டராக இருந்தாலும் பரவாயில்லை. வீட்டுக்குப் போனதும் என் வாயை பினாயில் போட்டுக் கழுவி விடுகிறேன். ஸ்டாலினால் முதல்வராக முடியாது” என்றார். அதனைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்.

பொதுக்கூட்டம்

Also Read: மந்திரி தந்திரி: திண்டுக்கல் சீனிவாசன்

எம்.எல்.ஏ பரமசிவம் தவறாக பேசியதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டத்தில் பேசும் போது, ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறி வருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ஆனால், காங்கிரஸ் ஆட்சியின் போது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்தது. அப்போது பிரதமராக இருந்த முலாயம் சிங்” என்று சொல்லிய சீனிவாசன், உடனே சுதாரித்துக்கொண்டு, “மன்மோகன் சிங்...” என்றார்.



from Latest News

No comments