Breaking News

ஓசூர் கொள்ளை - தங்க நகைகளுடன் கொள்ளையர்களை வளைத்த ஹைதராபாத் போலீஸ்!

தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள ஓசூரில் செயல்பட்டு வரும் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று காலை 9.30 மணியளவில் கொள்ளையர்கள் நுழைந்தனர். முகமூடி அணிந்தபடி அங்கிருந்த காவலரை துப்பாக்கி முனையில் மிரட்டி அந்த நிறுவனத்தில் நுழைந்த கொள்ளையர்கள், மேனேஜர் ஸ்ரீனிவாச ராகவையும் மிரட்டியிருக்கிறார்கள்.

கொள்ளை - சிசிடிவி

அங்கிருந்த ஊழியர்களையும் மிரட்டிய அவர்கள் துப்பாகி முனையில் அங்கிருந்த 2,091 கிராம் தங்க நகைகள் மற்றும் 96,000 ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தனர். அத்தோடு அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார், கொள்ளை நடைபெற்ற முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமாரக்களை வைத்தும் விசாரணையைத் துரிதப்படுத்தினர்.

Also Read: `கேரள போலீஸ் உடையில் ரூ.76 லட்சம் கொள்ளை; 15 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை’ - என்ன நடந்தது?

கொள்ளையடித்த பின்னர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரும் வெவ்வேறு வாகனங்களில் ஏறித் தப்பியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், கொள்ளையர்களில் சிலர் தெலங்கானாவுக்குச் சென்றதையும் தமிழக போலீஸார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து ஹைதராபாத் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள்

ஹைதராபாத் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஓசூர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளும் மீட்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.7.5 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.



from Latest News

No comments