Breaking News

Doctor Vikatan: PCOD உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?

பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை ௨ள்ள இளம் பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத ௨ணவு வகைகள் ௭ன்னென்ன?

- கீர்த்தி (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``நீங்கள் சாப்பிட வேண்டியவை...

- கைக்குத்தல் அரிசி, பழுப்பரிசி, ஸ்டீல்கட் ஓட்ஸ், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, வரகு போன்ற சிறுதானியங்கள், கோதுமை மற்றும் பார்லி.

- கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் தயாரிக்கப்பட்ட பனீர்(வாரத்துக்கு 3 நாள்களுக்கு), நீர்மோர், கொழுப்பு நீக்கப்பட்ட தயிர்.

- பப்பாளி, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, கிர்ணி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள்.

- மாதுளை (வாரத்துக்கு 3 முறை - சிறிய கப் மட்டுமே)

- முளைகட்டிய பயறு, பருப்பு வகைகள், கடலை வகைகள்.

- புரொக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர், காளான், பீன்ஸ், தக்காளி, வெண்டைக்காய், பூசணி, வாழைப்பூ, வாழைத்தண்டு, கோவக்காய், எல்லா கீரை வகைகள்...

Also Read: PCOD இருக்கறவங்க இதை செய்தால் குணமாகிடும்! | Gynaecologist Explains | Say Swag | PCOS

- புடலங்காய், பீர்க்கங்காய், பரங்கிக்காய், சுரைக்காய், தேங்காய், வாழைக்காய், கேரட், பீட்ரூட்

- பாதாம், அக்ரூட், பேரிச்சம்பழம் போன்ற உலர் பழங்கள் (அளவோடு)

- இளநீர், பழ ஸ்மூத்தீ (இனிப்பே சேர்க்காவிட்டாலும் பழங்களை ஜூஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்), சாலட், சுண்டல், முட்டை எடுத்துக்கொள்பவர் என்றால் இள வயதினராக இருக்கும்பட்சத்தில் தினம் ஒரு முட்டையும், மற்றவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கரு அல்லது வாரத்துக்கு நான்கு நாள்களுக்கு முழுமுட்டையும் எடுத்துக்கொள்ளலாம்.

- வாரத்துக்கு 3 நாள்களுக்கு கிரில்டு சிக்கன் அல்லது மீன் 200 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

பஜ்ஜி

Also Read: Covid Questions: பிசிஓடி (PCOD) பாதிப்புள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

- மைதா, சர்க்கரை, பிரெட், நாண், பிஸ்கட், குல்ச்சா, ரீஃபைண்டு ஓட்ஸ் மற்றும் ரீஃபைண்டு கோதுமை

- கொழுப்புள்ள பால், தயிர், சீஸ் மற்றும் வெண்ணெய்

- மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், பச்சை வாழைப்பழம்

- சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு

- முந்திரி, திராட்சை, பிஸ்தா

- பாக்கெட் பழ ஜூஸ் (இனிப்பில்லாதது என்ற குறிப்புடன் வந்தாலும்), அனைத்துவகை குளிர் பானங்கள், பஃப், கேக் உள்ளிட்ட பேக்கரி உணவுகள், ஐஸ்க்ரீம், டோநட், ஸ்வீட்ஸ்

- எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, போண்டா, சமோசா, சிப்ஸ், முறுக்கு உள்ளிட்டவை.

- உணவுப்பழக்கத்தில் இவற்றைப் பின்பற்றுவதுடன் உடற்பயிற்சியையும் தினசரி வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தினமும் 10,000 அடிகள் நடப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News

No comments