Breaking News

டெல்லி: ``53 கோயில்களை இடிக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்திருக்கிறது" - குற்றம்சாட்டும் ஆம் ஆத்மி

டெல்லியில் 53 கோயில்களை இடிக்க மதக் குழுவுக்கு மத்திய அரசு அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங், "டெல்லியில் கோவில்களை இடிக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் மதத்தின் பெயரால் நாடகம் ஆடுகிறார்கள், வெறுப்பை பரப்புகிறார்கள், ஆனால் இப்போது மோடி அரசு தலைநகர் டெல்லியில் 53 கோவில்களை அழிக்க திட்டமிட்டுள்ளது.

பாஜக

இது தொடர்பாக 53 கோவில்களை இடிக்க அனுமதிகோரி டெல்லி அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த பட்டியலில் பழமையான ஸ்ரீ ராமர் கோவில், கிருஷ்ணர் கோவில், துர்கா கோவில், மகாதேவ் கோவில், சாய்பாபா கோவில் மற்றும் குருத்வாரா ஆகியவை அடங்கும்.

கஸ்தூரிபா நகர், ஸ்ரீனிவாஸ்புரி, முகமதுபூர், சரோஜினி நகர் ஆகிய இடங்களில் மொத்தம் 53 கோயில்கள் இடிக்க அனுமதி கோரப்பட்டுள்ளன. டெல்லி அரசுக்கு அந்த கடிதம் கிடைத்துள்ளது, அது குறித்து விரைவில் முடிவெடுப்போம்" என்று சஞ்சய் சிங் கூறியுள்ளார்.



from Latest News

No comments