Breaking News

``மகாராஷ்டிர எம்.எல்.ஏ-க்களை வங்காளத்துக்கு அனுப்புங்கள்; நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்"- மம்தா

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார். அவர்களை பா.ஜ.க அஸ்ஸாமில் வைத்துப் பாதுகாத்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டே-யுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைப்பேசி மூலம் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

உத்தவ் தாக்கரே

அஸ்ஸாமில் மழைவெள்ளத்தில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மீட்புப்பணி மற்றும் நிவாரணப்பணியில் ஈடுபடாமல் மாநில அரசு மகாராஷ்டிரா அரசைக் கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், சிவசேனா அதிருப்தி எம்.எம்.ஏ-க்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மம்தா பானர்ஜி

அதைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர் சந்திப்பில், "மகாராஷ்டிரா அரசை நெறிமுறையற்ற முறையில் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி செய்கிறது. மகாராஷ்டிர எம்.எல்.ஏ-க்களை வங்காளத்திற்கு அனுப்புங்கள், அவர்களுக்கு நாங்கள் நல்ல விருந்தோம்பல் செய்கிறோம். அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடையூறு விளைவிக்க மகாராஷ்டிரா எம்.எல்.ஏ-க்கள் அந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தத்துவாவுக்காகப் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே-வை நிர்பந்திக்கின்றனர். உத்தவ் தாக்கரே-வுக்கு நீதி வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.



from Latest News

No comments