Breaking News

கொரோனா தடுப்பூசிக்காக கொல்லப்பட்ட 5 லட்சம் சுறாக்கள்? - வெளியான அதிர்ச்சி தகவல்.!

கொரோனா தடுப்பு மருந்துக்காக சுமார் 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் ஒவ்வொரு நாளும் கொடிய கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சமீபத்திய தகவல்களின்படி, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தயாரிக்க, அதற்கு தேவையான இயற்கை எண்ணெயைப் பெறுவதற்காக சுமார் 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

image

சில கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளில் ஸ்குவாலீன் என்கிற ஒரு மூலப்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலப்பொருள் சுறாக்களின் கல்லீரலில் காணப்படும் ஒரு இயற்கையான எண்ணெயில் கிடைக்கிறது. ஸ்குவாலீன் தற்போது மருத்துவத்தில் ஒரு துணைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான கிளாசோஸ்மித்க்லைன் காய்ச்சல் தடுப்பூசிகளில் சுறா ஸ்குவாலீன் பயன்படுத்துகிறது என்று ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை கூறுகிறது.  

ஒரு டன் ஸ்குவாலீனைப் பிரித்தெடுக்க 3,000 சுறாக்கள் தேவைப்படுவதாகவும், இதைக்கொண்டு பத்து லட்சம் தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் ஸ்கை நியூஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் ஒரு எண்ணெய்யான ஸ்குவாலீனைப் பிரித்தெடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 லட்சம் சுறாக்கள் கொல்லப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

No comments