Breaking News

மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் - இலங்கை

இரு நாடுகளின் மீனவர் பிரச்னைகளுக்கு தீர்வு காண தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தயாராக உள்ளதாக அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டக்ளஸ் தேவானந்தா, ‘’இந்தியாவும் இலங்கையும் நீண்டகாலமாக வரையப்பட்ட பாக்கு நீரிணை  மீன்வள மோதலுக்கு தீர்வு காண உறுதிபூண்டுள்ளன.  மீனவர்களின் அத்துமீறல் காரணமாக இலங்கையின் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோன்று இந்திய மீனவர்களுக்கும் பெரிய பாதிப்பு உண்டு. கூட்டு குழுவின் மூலம் இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. .

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைவது மற்றும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி வலைகளை  கொண்டு மீன்பிடிப்பது ஆகியவை கவலையளிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதிநிதி மஹிந்த ராஜபக்ஷ இடையே சமீபத்தில் நடந்த மெய்நிகர் உச்சி மாநாட்டில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் பேசியதால், தமிழகத்துடன் ஒரு சாத்தியமான கலந்துரையாடல் பரிசீலிக்கப்பட்டது. எனவே இரு நாடுகளின் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு  தயாராக உள்ளது'' என்றார். 

பல ஆண்டுகளாக, இரு நாடுகளிலிருந்தும் அரசாங்கங்களுக்கும் மீனவர் தலைவர்களுக்கும் இடையே பல இருதரப்பு சந்திப்புகள் நடந்துள்ளன. ஆனால் இப்போது வரை, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

No comments