Breaking News

டெல்லி: `கொரோனா வைரஸின் இரண்டாம் அலை; பாதிப்பில் புதிய உச்சம்!’ - அரவிந்த் கெஜ்ரிவால்

டாக்டர் ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால், ``கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தலைநகர் டெல்லியின் நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறது. திடீரென இந்த மாத தொடக்கத்தில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 4,000-யை கடந்துள்ளது. இது இரண்டாம் அலையின் தாக்கமாக இருக்கக் கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்" என்றார்.

கோவிட்-19 கொரோனா வைரஸ்

இந்தியாவில் முதல் முறையாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள மாநிலமாக டெல்லி அறிவித்திருக்கிறது. இந்த நோயின் அதிக பாதிப்பாக மகாராஷ்டிராவில் மொத்தம் 12,63,799 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 2,56,789 நபர்கள் பாதிக்கப்பட்டு, இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

``கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 550 என்ற எண்ணிக்கையில் தான் இருந்தது. ஜூலை 01-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் வரை டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. சராசரியாக 1,100 முதல் 1,200 வரை புதிய பாதிப்புகள் பதிவாகியது. இந்நிலையில், ஆகஸ்ட் 17-ம் தேதி வாக்கில் பாதிப்புகள் திடீரென 1,100 முதல் 1,500 வரை அதிகரித்தது. இதனால் நாங்கள் உடனடியாக நாளொன்றுக்குச் செய்யப்படும் சராசரி கொரோனா பரிசோதனையை 20,000 -லிருந்து 60,000 ஆக உயர்த்தினோம்” என்றார் முதல்வர்.

தொடர்ந்து, ``அதிகரித்து வந்த பாதிப்பு செப்டம்பர் 9-ம் தேதி முதல் முறையாக 4,000-யை தாண்டியது. மொத்த பாதிப்பு இரண்டு லட்சத்தைத் தாண்டியது. அன்று மட்டும் பதிவான இறப்புகள் எண்ணிக்கை 20, மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 4,638. செப்டம்பர் 16-ம் தேதி பதிவான பதிப்பின் எண்ணிக்கை 4,473. இது தான் டெல்லியில் பதிவான அதிகப்படியான பாதிப்பு எண்ணிக்கையாகும். இதற்குப் பின்னர் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைத்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் பதிவான கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 3,700” என்றார். மேலும், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறையும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.



from Latest News

No comments