Breaking News

முகமறியும் தொழில்நுட்பம்.. தேசிய அடையாள அட்டையில் புதுமை புகுத்தும் சிங்கப்பூர்.!

உலகிலேயே முதல்முறையாக மக்களுக்கான தேசிய அடையாளத் திட்டத்தில் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் பயன்படுத்துவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையில் செயல்படுத்தப்படும் அடையாள அட்டை வழியாக எளிதாகவும் பாதுகாப்பாகவும் மக்கள் சேவைகளைப் பெறலாம்.

சிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் முதல்கட்டமாக புதிய தொழில்நுட்பம் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் ஒருவரை அடையாளம் காண்பதுடன், அந்த நபர் உண்மையிலேயே அங்கே இருக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்தமுடியும்.

image

"ஒருவரது புகைப்படம், வீடியோ, பதிவு செய்யப்பட்ட உள்ளடக்கம் அல்லது போலியாக திரித்து உருவாக்கப்பட்ட பதிவையோ ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பிட்ட நபரின் இருப்பு இருந்தால் மட்டுமே அடையாளத்தை உறுதிசெய்வது பயோமெட்ரிக் அடையாள அட்டையின் தனித்துவம்" என்கிறார் புதிய தொழில்நுட்பத்தை வழங்கியுள்ள பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ பட்.

image

இந்த தொழில்நுட்பம் நாட்டின் மின்னணு அடையாளத் திட்டமான சிங்பாஸுடன் இணைக்கப்பட்டு அரசு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும். முகமறிதல் மற்றும் முக அடையாள சரிபார்ப்பு இரண்டுமே ஒருவரின் முகத்தை ஸ்கேன் செய்வதையும், அவற்றின் அடையாளத்தைக் கண்டறிய ஏற்கெனவே தரவுதளத்தில் உள்ள படத்துடன் பொருத்துவதையும் சார்ந்துள்ளது.

தேசிய அடையாள எண் அல்லது அட்டை என்ற பயன்பாடே இல்லாத சில நாடுகளும் இந்தப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு யோசித்துவருகின்றன.

 சென்னை மெட்ரோ நிலையங்களில் விரைவில் இ ஆட்டோக்கள்.!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

No comments