Breaking News

நிவர் புயல்: அவசரகால உதவி எண்களை வெளியிட்ட கடலூர் மாவட்ட நிர்வாகம்!

தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் நாளை 25-ம் தேதி மாமல்லபுரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம் என்றும் அப்போது சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கடல் பகுதிகளில் சூறாவளியும் வீசும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நிவர் புயல் அவசரகால தொலைபேசி எண்கள்

தற்சமயம் இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கில் 450 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 440 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவசரத் தேவைகளுக்காக பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்பு கொள்வதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டிருக்கிறது கடலூர் மாவட்ட நிர்வாகம்.

மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொள்ளலாம். அதேபோல 04142-220700, 04142-233933, 04142-221383, 04142-221113 எண்களிலும் தொடர்புகொண்டு தகவலை தெரிவிக்கலாம்.

Also Read: நிவர் புயல்: `கஜா பாடம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!’- டெல்டா மக்கள் முன்வைக்கும் யோசனைகள்

கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 04142-231284 என்ற எண்ணிலும், சிதம்பர் சார் ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04144-222256, 04144-290037 என்ற எண்களிலும், விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04143-260248 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.



from Latest News

No comments