Breaking News

காரைக்கால்: கரை திரும்பாத 120 மீனவர்கள் - கடற்படை மூலம் மீட்க நடவடிக்கை!

நிவர் புயலை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

காரைக்கால்

இதுபற்றி அவர் பேசுகையில், ``சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில்  நிவர் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்தினோம். ஒவ்வொரு துறைகளிளும் ஒரு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்

சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற உத்தரவு,  மின்கம்பங்கள் சரியாக உள்ளாதா என ஆய்வு செய்யவும் மரங்களில் உள்ள கிளைகளை கழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையில்லாமல் குடிநீர் வழங்கவும், மின்சாரம் தடைபட்டால் 12 மணி நேரத்தில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காரைக்கால்

புதுச்சேரியில் ஒரு படகில் மட்டும் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்கள் இரவு கரை திரும்புவார்கள். காரைக்காலில் 90 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 120-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத்  திரும்பவில்லை. இவர்களைக் கடற்படை மூலம் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் படகு மற்றும் வலைகளைப் பாத்திரமாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் இருப்புவைக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருமணம் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்து போதுமான உணவு வழங்கப்படும். தாழ்வான பகுதிகளில் இஞ்சின் மோட்டார் மூலம் நீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலையில் இருந்து 25 -ம் தேதி வரை தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. வியாபார நிறுவனங்களை மூட வலியுறுத்தப்பட்டுள்ளது.10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு வகுப்புக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறோம். உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் 24 மணி  நேரமும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்



from Latest News

No comments