Breaking News

`முதல்ல வெளியில போங்க!' - வசனத்தால் ஆடிப்போன சித்தார்த், கௌசல்யா... ஆனால்?! #VallamaiTharayo

பக்கத்து வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்த துர்கா, அபி வீட்டுக்கு வருகிறார். அக்கம்பக்கத்தில் யாருடனும் பழக விருப்பம் இல்லாத சித்தார்த், கடமைக்காக ஹலோ சொல்கிறான். சித்தார்த்தையும் கெளசல்யா குடும்பத்தையும் வீட்டுக்கு அழைக்கிறார்.

குழந்தைகளை ஸ்கூலுக்குத் தயார் செய்துவிட்டு, பெரியம்மா, பெரியப்பாவுடன் ஹாஸ்பிடலுக்குக் கிளம்புகிறாள் அபி. அப்போது கெளசல்யாவின் மகன் பூஸ்ட் கேட்கிறான். அதைக் கொடுத்துவிட்டுக் கிளம்பச் சொல்கிறார் கெளசல்யா. ஒரு வீட்டுக்கு வந்தால், அந்த வீட்டுப் பெண்ணின் வெறுப்பை எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியும் என்ற பாடத்தை கெளசல்யாவின் செயல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். இருக்கும் வேலைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலமே அந்த வீட்டில் மகிழ்ச்சியாகத் தங்க முடியும் என்ற எளிய டெக்னிக் கூடப் பலருக்கும் தெரிவதில்லை.

Vallamai Tharayo

ஹாஸ்பிடலிலிருந்து நுழையும் அபி, வீட்டில் இரைந்து கிடக்கும் துணிகளைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். அவற்றைச் சுத்தம் செய்துகொண்டிருக்கும்போதே, ஊர் சுற்றிவிட்டு வருகிறது கெளசல்யாவின் குடும்பம். “எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு எங்களுக்காக சித்தார்த் வந்துட்டான்” என்ற பெருமிதத்தில், உங்களுக்காக வரவில்லை, எங்களுக்காக வந்துவிட்டான் என்ற தகவலைச் சொன்னால்தானே மற்றவர்கள் மனம் கஷ்டப்படும்! என்ன ஒரு நல்ல எண்ணம்?

அபியிடம் கெளசல்யா சமைக்கச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பக்கத்து வீட்டு துர்கா பெரிய கேரியருடன் வருகிறார். 'அதையெல்லாம் சாப்பிட முடியாது, நீ சமை' என்கிறார் அபியிடம் கெளசல்யா. இதை எல்லாம் பார்க்கும் சித்தார்த், “மீதியிருக்கும் உணவைக் கொடுக்கறாங்க. அத வாங்க நாம என்ன பிச்சை எடுக்கிறோமா” என்று கத்துகிறான்.

அவன் கீழே வரும்போது கெளசல்யாவின் கணவரும் குழந்தைகளும் ‘ஆஹா! என்ன அருமையான சாப்பாடு!’ என்று சாப்பிட ஆரம்பித்துவிடுகிறார்கள். அதைப் பார்க்கும் சித்தார்த்துக்கு இன்னும் டென்ஷன். அக்காவிடம் கோபப்படுகிறான்.

Vallamai Tharayo

”எல்லாம் நமக்குன்னு வந்து வாச்சிருக்கு” என்று கெளசல்யா தலையில் அடித்துக்கொள்ளும்போது, “எனக்கும்தான் என் புருஷனோட தனியா வாழணும்னு ஆசை. அவரோட மொத்த குடும்பமும் அவர் தலையில ஏறி உட்கார்ந்திருக்கும்னு எனக்குத் தெரியாம போச்சு. முதல்ல வெளியில் போங்க” என்ற பேச்சைக் கேட்டு சித்தார்த்தும் கெளசல்யாவும் அரண்டு போகிறார்கள். பிறகுதான் அது சீரியல் வசனம் என்பது தெரிய வருகிறது. இருவரும் நிம்மதியடைகிறார்கள்.

வீட்டின் சூழலைக் கண்ட அபியின் பெரிம்மாவும் பெரியப்பாவும் அன்றே ஊருக்குக் கிளம்புவதாகச் சொல்கிறார்கள். சேதுராமன் அவர்களை அழைத்துச் செல்ல வருகிறார். அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



from Latest News

No comments