Breaking News

மன்றத்தினரின் கோரிக்கை: அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்?

தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறார் அர்ஜுனமுர்த்தி. பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவில் நிர்வாகியாக இருந்துவிட்டு, ரஜினி தொடங்கப்போவதாக அறிவித்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றதும், தனிக் கட்சி தொடங்குவது பற்றி இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க இருக்கிறார். இதேநேரம், சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்று மக்கள் மன்றத்தின் முக்கிய பிரமுகர்கள் கூட்டம் நடத்தினார்கள் அல்லவா? அதற்கும் ரஜினி வளைந்துகொடுக்கவில்லை. என்னைச் சங்கடப்படுத்தாதீர்கள் என்று சொன்னார். ஆனால்

லதா ரஜினிகாந்த்

, சில மாவட்டங்களில், ரஜினிகாந்தின் மனைவி லதாவை தலைமை ஏற்கும்படி கோரிக்கை எழுப்பினர். அதன் தொடர்ச்சியாக, லதா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக மன்றத்தின் ஒருதரப்பினர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அர்ஜூனமூர்த்தி அறிவிப்புக்குப் பின்னணியில் லதா ரஜினிகாந்த் இருக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்ப்பு.



from Latest News

No comments