Breaking News

அன்புச்செல்வன் படத்தில் கௌதம் மேனன் நடித்தாரா இல்லையா? பிரச்னையில் சம்பந்தப்பட்ட இயக்குநர் விளக்கம்!

கௌதம் மேனன் நடித்திருப்பதாகச் சொல்லப்படும் 'அன்புசெல்வன்' திரைப்படம் பற்றிய விவகாரம் இன்னும் நீண்டுபோய்க்கொண்டு இருக்கிறது. இது சம்பந்தமான ஒரு விரிவான கடிதத்தைத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கௌதம் மேனன் எழுதியிருக்கிறார். இது சங்கத்தின் பரீசிலனையில் இருக்கிறது.
கௌதம் மேனன் கடிதம்
கௌதம் மேனன் கடிதம்

இந்தக் கடிதத்தில் கௌதம் மேனன், தான் நடிக்க ஒப்புக்கொண்டது ஜெய் கணேஷ் என்ற இயக்குநர் கொண்டுவந்த 'வினா' எனும் கதையைத்தான் என்றும், இப்போதிருக்கும் இயக்குநர் வினோத் குமாரை தான் சந்தித்ததே இல்லையென்றும், இந்த 'அன்புச்செல்வன்' படம் குறித்து தன்னிடம் எதுவும் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்து கௌதம் மேனன் விகடனுக்கு முன்னர் அளித்த விளக்கத்தை இங்கே படிக்கலாம்.

Also Read: `அன்புச்செல்வன்' - கௌதம் மேனனுக்கே தெரியாமல் அவர் நடிப்பதாக வெளியான போஸ்டர்... பின்னணி என்ன?

கௌதம் மேனன் - ஜெய் கணேஷ்
இயக்குநர் ஜெய் கணேஷ் இயக்கிய 'வினா' படத்தின் சில காட்சிகளைத்தான் 'அன்புச்செல்வன்' என்ற பெயரில் தயாரிப்புத் தரப்பு வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இது குறித்து இயக்குநர் ஜெய் கணேஷ் நம்மிடம் பேசினார்.

"இது திருநெல்வேலியில் இருக்கிற ஒரு போலீஸ் ஆபீஸரின் கதை. ஆறு வருடங்களாக பெரும் சிரத்தையோடு தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட். பல உண்மைச்சம்பவங்களின் அணிவகுப்பும், அதன் சேர்க்கையும் கொண்டது. என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரத்திற்கு மத்தியிலும் இந்த ஸ்கிரிப்டின் மீதான பிரியத்தால் ஒப்புக்கொண்டு நடித்தார் கௌதம். நான்தான் இந்தத் தயாரிப்பாளரை கொண்டுபோய் அவரிடம் நிறுத்தினேன். படத்தை நல்லபடியாக முடித்துவிடுவதாக சொன்னதால் அவர் ஒப்புக்கொண்டு நான்கு நாள்கள் நடித்தார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா ஆறுநாள்கள் நடித்தார்.

கௌதம் மேனன் - ஜெய் கணேஷ்

அந்தத் தயாரிப்பாளர் அதற்குப் பிறகு பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று போனவர் எந்த ஏற்பாடும் செய்து அடுத்தடுத்த படப்பிடிப்பை நடத்தவில்லை. இப்படியே வருஷம் கடந்துவிட்டது. திடீரென்று இன்னொரு டைரக்டர் அந்தப் படத்தை டைரக்ட் செய்வார் என்று அதே தயாரிப்பாளர் என்னிடம் சொன்னார். நாங்கள் யாரும் இதற்கு உடன்படவில்லை. இது இப்படியிருக்க இயக்குநர் கௌதம் மேனனுக்கே தெரியாமல் அன்புச்செல்வன் என்ற தலைப்பில் FIRST Look வந்திருக்கிறது.

கௌதம் மேனன் - ஜெய் கணேஷ்

'அன்புச்செல்வன்' என்ற கேரக்டர் நடிகர் சூர்யாவுக்கு பொருந்திப்போனது. இந்தப் பெயரில் நடிக்க டைரக்டருக்கு கொஞ்சமும் சம்மந்தமோ விருப்பமோ கிடையாது. நானும் இயக்குநர் கௌதம் சாரும் இணைந்து வேறோரு படைப்பில் இணைய ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. கௌதம் சாருக்கும், இந்த அன்புசெல்வனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதே உண்மை. மறுபடியும் நாங்கள் இணைவோம்" என்றார் இயக்குநர் ஜெய்.



from Latest News

No comments