Breaking News

`ரஜினிகாந்தின் ஆசிர்வாதம்; விரைவில் மாற்றத்தின் சேவகனாக...!’ - அர்ஜுனமூர்த்தி சொல்வதென்ன?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக ரஜினி அறிவித்து, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அர்ஜுனமூர்த்தி என்பவரைத் தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளதாக அறிவித்தார். முன்னதாக பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்த அர்ஜுனமூர்த்தி, பின்னர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

அர்ஜுனமூர்த்தி

அதன்பின்னர் தனது உடல்நிலை காரணமாக கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகினார் ரஜினிகாந்த். இந்த நிலையில் அர்ஜுனமூர்த்தி ட்விட்டர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ``மாற்றத்தின் பயணம் விரைவில்...” என அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை நமது நாட்டுக்கு அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நமது தலைவருக்கு உடல் நலம் குறித்து மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் காரணமாக, அவர் அரசியலில் ஈடுபட முடியாமல் போனதும் நாமறிந்த ஒன்று. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் வேதனை அடைந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ``ரஜினி - அர்ஜுனமூர்த்தி தொடர்பு லேட்டாகத்தான் தெரிந்தது!’’ - விளக்கும் ஹெச்.ராஜா

மேலும், ``இதற்கு ஈடுசெய்யும் வகையில் ரஜினிகாந்தின் நீண்டகால அரசியல் மாற்றத்தின் நினைவானது நிச்சயமாக நிகழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து, நமது தமிழகத்தில் `அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம், இப்ப இல்லன்னா எப்போது’ என்று சொல்லிய ரஜினிகாந்தின் நல்ல எண்ணம், நல்ல மனது நம் தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள்.

தற்போது தலைவர் ஒரு நடிகராக அவரது தொழில் தர்மத்தின் காரணமாக அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வரக் கூடாது என்ற காரணத்தால் அவரது பெயர் புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். எனவே என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பி நாட்டுக்கு அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி, நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என்று நம்புகிறேன்.

எந்த சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். அரசியலில் இல்லை என்றாலும் எனக்குத் தலைவர் என்பதையும் தாண்டி, நான் ஒரு ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன். அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கெட்டபெயரை நாம் ஏற்படுத்த மாட்டோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஆசிர்வாதம் மட்டும் போதும் அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம் மிக்க நன்றி விரைவில் மாற்றத்தின் சேவகனாக உங்கள் முன்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: `மோடியும் ரஜினியும் எனது இரு கண்கள்!’ - அர்ஜுனமூர்த்தி



from Latest News

No comments