இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம்பிடிக்கும் நிரஞ்சனா அகத்தியன்
அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனா அகத்தியனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
அஜித், தேவயானி நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'காதல் கோட்டை'. இப்படத்தை இயக்கியவர் அகத்தியன். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது முதல் முகள் பெயர் கனி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் திருவின் மனைவி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments