தொடர் மழையால் உடைந்த வெட்டாற்றின் கரை; ஊருக்குள் புகுந்த வெள்ளத்தால் மூழ்கிய பயிர்கள்!
தஞ்சை, திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் நாற்று நடவு மற்று நேரடி விதைப்பு செய்யப்பட்டு, பயிர்கள் வளரத் தொடங்கியுள்ள நிலையில், இப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை, இப்பகுதி விவசாயிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Also Read: நாகையில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை: இது நியாயமா முதல்வரே?
கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்ட கிராமங்களில் உள்ள தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், வெள்ளக்காடாக காட்சி அளிக்க தொடங்கியிருக்கின்றன. திருவாரூர் மாவட்ட விவசயிகளுக்கு பாசனம் அளிக்கூடிய முதன்மையான ஆறுகளில் ஒன்றான வெட்டாற்றின் கரை உடைப்பெடுத்ததால், சுற்றுவட்டார கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் இங்கு வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். மேலும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் மூழ்கின.
திருவாரூர் அருகில் உள்ள நடப்பூர், உக்கடை, வடகண்டம், கங்களாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் வழியாக வெட்டாறு செல்கிறது. உக்கடையில் வசிக்கும் விவசாய குடும்பங்கள், வெட்டாற்றின் கரை பகுதியில் அமைந்துள்ள சாலையின் வழியாகதான் நடப்பூர் வழியாக பிற ஊர்களுக்கு வந்து செல்கிறார்கள். இங்கு சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் வெட்டாற்றின் கரை வழியே உள்ள சாலையைப் பயன்படுத்தி பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் கனமழையால் வெட்டாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திடீரென வெட்டாற்றின் உக்கடை பகுதியில் சுமார் 6 மீட்டர் தூரம் கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் இந்த பகுயில் வசித்து வரும் மக்கள், தங்களது வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.
Also Read: முல்லை பெரியாறு விவகாரம்: இந்த உண்மைகளை கேரள அரசியல்வாதிகள் உணர மறுப்பது ஏன்?
உடைப்பெடுத்த வெட்டாற்றின் கரை பகுதி மற்றும் வெள்ளநீர் புகுந்த கிராமங்களை திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் காய்திரி கிருஷ்ணன், திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.
அப்போது இக்குழுவினரிடம் பேசிய இப்பகுதி விவசாயிகள், ``வெட்டாற்றின் கரை மிகவும் பலவீனமடைந்த நிலையில் இருந்ததோடு மட்டுமல்லாமல், இந்த ஆற்றில் இருந்து செல்லக்கூடிய வாய்க்கால்கள் முறையாக தூர் வாரப்படாமல் இருந்தன. வெட்டாற்றின் கரையை பலப்படுத்தி, வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாததால்தான் தற்போது உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் தண்ணீர் புகுந்து, பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைகாலம் முடிந்த பிறகாவது, இதனை சீரமைக்க வேண்டும்" என வலியுறுத்தினார்கள்.
from Latest News
No comments