கே.பி அன்பழகன்: லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரெய்டில் 6-வது முன்னாள் அமைச்சர்! -57 இடங்களில் சோதனை
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டு, அன்பழகன் தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டவர்.
முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் தனது வருமானத்தை விட கூடுதலாக ரூபாய் 11.32 கோடி சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு உள்ளாகும் 6-வது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் ஆவார். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் வீடுகளில், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடதக்கது.
from Latest News
No comments