சமந்தாதான் முதலில் விவாகரத்து கோரினார்: நாகசைதன்யா தந்தை நடிகர் நாகார்ஜுனா தகவல்
ஹைதராபாத்: சமந்தாதான் முதலில் நாகசைதன்யாவுடனான உறவை முறித்துக்கொள்ள நினைத்து விவாகரத்து கோரினார் என அவரது மாமனாரும், பிரபல தெலுங்குதிரைப்பட நடிகருமான நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு திரைப்பட நடிகர்நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 10 ஆண்டுகளின் நட்பு காதலில் முடிந்தது என அறிவித்த இருவரும், சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். ஆனால், திடீரென இருவரும், ‘இனி நாங்கள் கணவன்- மனைவி அல்ல, பிரிகிறோம்’ என்று கடந்த ஆண்டுஅக்டோபரில் தனித்தனியாக சமூக வலைதளம் மூலம்அறிவித்ததைக் கண்டு தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி, தென்னிந்திய திரையுலகமே அதிர்ச்சி யுற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments