Breaking News

சென்னை: நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு! - சிசிடிவியால் சிக்கிய ஊழியர்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் டார்லிங், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினியாக நடித்தவர். கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை நிக்கி கல்ராணி, அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தன்னுடைய வீட்டில் வேலைப்பார்ப்பதற்காக தனியார் ஏஜென்ஸி மூலம் தனுஷ் என்பவரை நியமித்திருந்தாகவும். கடந்த ஜனவரி 11-ம் தேதி தனுஷ், சில பொருள்களை எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு வீட்டில் சோதனை நடத்திய பிறகு விலை உயர்ந்த கேமரா, 40 ஆயிரம் ரூபாய் உள்பட சில பொருள்கள் காணவில்லை. எனவே தனுஷிடம் விசாரணை நடத்தி திருட்டுப்போன பொருள், பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

நிக்கி கல்ராணி

Also Read: ``என் மனசு நிம்மதிக்கு அந்தப் பசங்கதான் காரணம்'' - நடிகை நிக்கி கல்ரானி

அதன்பேரில் அண்ணாசாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்தநிலையில் தனுஷின் அம்மா நாகவல்லி, சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தனர். அதில் தன்னுடைய மகனைக் காணவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். அதனால் இரண்டு புகார்கள் மீதும் போலீஸார் விசாரணை நடத்திய வந்த நிலையில் தனுஷ், திருப்பூரில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் தனுஷைப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருடியதும் அதை கோவையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து தனுஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Latest News

No comments