`தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறும் பிள்ளைகளுக்கு ஆதரவு தாருங்கள்!’ -போப் பிரான்சிஸ் அறிவுரை
கடந்த ஆண்டு வாட்டிகன் நகரில், `ஓரினச்சேர்க்கையாளர்களை ஆசிர்வதிக்க முடியாது' என்று வாட்டிகன் கத்தோலிக்க பாதிரியார்கள் கூறியது அப்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வாட்டிகன் நகரில் நடைபெற்ற வாராந்திர கூட்டத்தில், தன் பாலின ஈர்ப்பாளர்களாக மாறும் பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் சந்திக்க நேரிடும் பிரச்சனைகள் குறித்து பேசிய பேசிய போப் பிரான்சிஸ், ``தங்களுடைய பிள்ளைகள் தன் பாலின ஈர்ப்பாளர்களாக இருப்பதற்கான மாறுதல்களை காணும்போது, அதை எவ்வாறு அணுக வேண்டுமென்பதுதான் அவசியமே தவிர, அவர்களைக் கண்டிக்கும் முயற்சியில் ஈடுபடுவது தவறான ஒன்றாக மாறிவிடும்" என்று பெற்றோர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ``ஒரே பாலின திருமணங்களை தேவாலயங்களில் ஏற்க முடியாதுதான், இருந்தாலும் இது போன்ற தம்பதிகளுக்கான சுகாதாரம், ஓய்வூதியம் மற்றும் உரிமை மாதிரியான சிவில் யூனியன் சட்டங்களை நம்மால் ஆதரிக்க முடியும்" என்றும் போப் பிரான்சிஸ் கூறியிருக்கிறார்.
அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களை பாதிரியார்கள் ஆசீர்வதிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
போப் பிரான்சிஸ்-ன் இந்த கருத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
Also Read: பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் நடந்த முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்!
from Latest News
No comments