Breaking News

உ.பி: `அவர்களை கடுமையாகத் தாக்குங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்' - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

பிப்ரவரி 10-ம் தேதி முதல் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கவிருக்கும் நிலையில், அங்கு காணொளி மூலம் பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரசாரங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், கித்வாய் நகர் தொகுதியில் காணொளி மூலம் தேர்தல் பிரசாரம் செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதியின் பிரசார வீடியோ அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்த பிரசார வீடியோவில், ``அவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடியவர்கள். அவர்களைக் கடுமையாக தாக்குங்கள் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று பா.ஜ.க எம்.எல்.ஏ பேசுகிறார். பா.ஜ.க ஆதரவாளர்கள் இந்த வீடியோவை முகநூலில் பதிவேற்றியதையடுத்து தற்போது வைரலாகி வருகிறது.

மகேஷ் திரிவேதியின் இந்த பிரசராத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாடி கட்சியினர், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப் போவதாகக் கூறியுள்ளனர்.

அகிலேஷ் யாதவ்

இந்த நிலையில், மகேஷ் திரிவேதியின் பிரசார வீடியோ குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வதாகவும், விதிமீறல் ஏற்பட்டிருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரி நேஹா சர்மா தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Also Read: உத்தரப்பிரதேசம்: ``அகிலேஷ் யாதவ் ஜின்னாவின் ஆதரவாளர்!” -பாஜக கடும் விமர்சனம்



from Latest News

No comments