Doctor Vikatan: கண்களில் கிளக்கோமா பாதிப்பு; பார்வையிழப்பைத் தவிர்க்க வழி உண்டா?
எனக்கு கண்களில் கிளக்கோமா (Glaucoma) பாதிப்பு உள்ளது. வயது 61. பிரபல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன். கண்களில் பிரஷர் குறைக்க Xalatan drops உபயோகிக்கிறேன். பிரஷர் கட்டுக்குள் உள்ளது. கண்களில் தூசி போன்று தெரிகிறது. Field test செய்கிறார்கள். பார்வை எப்போது வேண்டுமானாலும் போய்விடும் என்கிறார்கள் டாக்டர்கள். பார்வையைக் காப்பாற்ற வேறு ஏதாவது சிகிச்சை உள்ளதா?
- சகுந்தலா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
``கிளக்கோமோ விஷயத்தில் கண்களின் பிரஷர் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்னையை நாங்கள் `சைலன்ட் திருடன்' என்று குறிப்பிடுவோம். அதாவது சைலன்ட்டாக பார்வையைப் பறிக்கும் பாதிப்பு இது. சென்ட்ரல் விஷன் எனப்படும் மையப்பார்வை மட்டுமே இருக்கும். பெரிஃபெரல் விஷன் எனப்படும் புறப்பார்வை போய்விடும். அதற்காகத்தான் உங்களுக்கு Field test செய்யச் சொல்லியிருப்பார்கள். அத்துடன் OCT எனப்படும் Optical Coherence Tomography test, Central Corneal Thickness test ஆகியவையும் செய்யப்பட வேண்டும். நீங்கள் தற்போது உபயோகிக்கும் டிராப்ஸில் பிரஷர் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அதையே தொடர்ந்து உபயோகிக்கலாம்.
Also Read: Doctor Vikatan: வெந்நீரில் தேன் கலந்து குடித்தால் எடை குறையுமா?
ஒருவேளை பிரஷர் கட்டுக்குள் வரவில்லை என்றால் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் கண் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும்.
அதற்கேற்ப உங்கள் மருத்துவர் சிகிச்சையை மாற்றித் தருவார். இதையும் தாண்டி, கண் பிரஷரை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றால் Trabaculectomy என்ற அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம்.
Also Read: Doctor Vikatan: 2 வருடங்களாகத் தவிர்த்த மருத்துவமனை விசிட்; இன்னும் தள்ளிப்போட வேண்டுமா?
கிளக்கோமோ பாதிப்பில் பார்வை நரம்பு பாதிக்கப்படலாம். அந்தப் பிரச்னை சரிசெய்ய முடியாதது. எனவே இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை அடிக்கடி மருத்துவரை அணுகி, தேவையான சோதனைகளை மேற்கொண்டு சரியான சிகிச்சைகளைப் பின்பற்றுவதன் மூலம் பார்வை இழப்பைத் தவிர்க்க முயலலாம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News
No comments