Doctor Vikatan: வளர்ச்சியில்லாத மீசை, தாடி; ஹார்மோன் பிரச்னையா? ஆண்மைக்குறைவா?
என் வயது 25. இன்னும் மீசை, தாடி வளர்ச்சி சரியாக இல்லை. இதனால் எப்போதும் க்ளீன்ஷேவ் தோற்றத்திலேயே இருக்க வேண்டியிருக்கிறது. இதற்கு ஹார்மோன் பிரச்னைகள் காரணமாக இருக்குமா? எனக்கு ஆண்மைக்குறைவு வருமா?
- விக்ரம் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், திருச்சியைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் சக்திவேல்.
``நீங்கள் அவசியம் நாளமில்லா சுரப்பியியல் மருத்துவரை அணுக வேண்டும். நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் என்பவர் ஹார்மோன்கள் தொடர்பான பிரச்னைகளைப் பரிசோதித்து சிகிச்சை அளிப்பவர். அவர் உங்களுக்குச் சில ஹார்மோன் பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். அந்தப் பரிசோதனை முடிவுகள் நார்மல் என்று வந்தால், உங்களுக்கு ஹேர் ஃபாலிக்கிள் எனப்படும் மயிர்க்கால்களில் ஹார்மோன் ஏற்பிகள் குறைவாக இருக்கலாம். அதாவது கூந்தலின் வேர்களுக்கு வரக்கூடிய ஹார்மோன் ஏற்பிகள் குறைவாக இருக்கலாம்.
உங்கள் அபிமான நட்சத்திரங்களையே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோமே... அவர்களில் சிலருக்கு அடர்த்தியான தாடி, மீசை இருக்கும். சிலருக்கு தாடி, மீசை வளர்ச்சியே இருக்காது. அதற்காக அவர்கள் ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் என்று அர்த்தமில்லையே. அவர்களுக்கு ஹார்மோன் தொடர்பான ஏதோ பிரச்னை இருக்கலாம், அவ்வளவுதான்.doctor
Also Read: Doctor Vikatan: உடல்வலியும் களைப்பும் கொரோனா அறிகுறிகளாக இருக்குமா?
எனவே நீங்கள் ஹார்மோன் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை அணுகி, அடிப்படை பரிசோதனைகளை மேற்கொண்டு, அதற்கேற்ப மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளைப் பின்பற்றுவதுதான் இதற்கான தீர்வு. தேவையற்ற குழப்பங்களைத் தவிருங்கள்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News
No comments