Exclusive: பிக் பாஸ் அல்டிமேட் செல்லும் `குக்கு வித் கோமாளி’ புகழ்! பார்ட்னரும் செல்கிறாரா?
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 முடிவடைந்ததைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் டிஸ்னி பளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்க இருக்கிறது பிக் பாஸ் அல்டிமேட். இதன் தொடக்க நிகழ்ச்சி விஜய் டிவியிலும் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஒ.டி.டி.யில் முதன் முதலாக ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களில் சிநேகன், ஜூலி, வனிதா ஆகியோரது பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன. விகடன் தளத்தில் இவர்களின் பெயர்களுடன் கலந்து கொள்ள இருக்கும் மேலும் சில போட்டியாளர்களின் பெயர்களையும் நாம் எக்ஸ்க்ளூசிவாகத் தந்திருந்தோம்.
ஓவியா, ஜூலி, வனிதா விஜயகுமார், சிநேகன், அபிராமி வெங்கடாசலம், சுரேஷ் சக்ரவர்த்தி, தாடி பாலாஜி, பரணி, அபிநய், அனிதா சம்பத் என அந்தப் பட்டியல் நீள்கிறது. கூடவே சுஜா வருணி, ஷெரின், 4-வது சீசனின் ரன்னர் பாலாஜி முருகதாஸ் போன்றோரும் ஹவுஸ்மேட்டாகச் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
தற்போது இதுவரை பிக் பாஸ் எந்த சீசனிலும் கலந்து கொள்ளாமல் நேரடியாக ’பிக் பாஸ் அல்டிமேட்’டுக்குள் செல்ல இருக்கும் புதிய போட்டியாளர் குறித்த விபரமும் எக்ஸ்க்ளூசிவாக நமக்குக் கிடைத்துள்ளது.
Also Read: பிக் பாஸ் அல்டிமேட் : சினேகன், ஜூலி -யுடன் வீட்டுக்குள் நுழையும் போட்டியாளர்கள் யார் தெரியுமா!
அவர் வேறு யாருமல்ல, ‘குக்கு வித் கோமாளி’ என்கிற ஒரே ஷோ மூலம் டிவி, சினிமா என இரண்டு ஏரியாவிலும் ஓஹோவென பெயர் பெற்ற புகழ்தான்.
பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளர் யார் என அறிய க்ளூ தந்த புரோமோவில் வந்த புகழ் அதே நிகழ்ச்சியில் தானும் ஒரு போட்டியாளராகச் செல்ல இருக்கிறார் என்பதுதான் ஹைலைட். சமீபத்தில்தான் புகழ் நடித்த 'சபாபதி', 'என்ன சொல்ல போகிறாய்' ஆகிய படங்கள் வெளியாகின. அஜித்துடன் 'வலிமை' படத்திலும் நடித்துள்ளார் புகழ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சில தினங்களுக்கு முன்புதான் பெனாசிர் என்பவருடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ‘பார்ட்னர்’ எனக் குறிப்பிட்டிருந்தார் புகழ்.
அந்த பார்ட்னரும் நிகழ்ச்சிக்குள் செல்வாரா என்கிறீர்களா?
’அட, இது கூட நல்லா இருக்கே’ என சம்பந்தப்பட்டவர்கள் முடிவெடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
from Latest News
No comments