Breaking News

மத்திய பட்ஜெட்: பாதுகாப்புத்துறைக்கு ரூ. 5.25 லட்சம் கோடி ஒதுக்கீடு! - ராஜ்நாத் சிங் வரவேற்பு

கடந்த ஆண்டு, பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ₹ 4.78 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது, இந்த ஆண்டு, 9.7% உயர்வு அடைந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள், பிற ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கான மூலதனச் செலவினங்களுக்காக மொத்தம் ₹ 1,52,369 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.

2021-22 ஆம் ஆண்டில், மூலதனச் செலவினத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ₹ 1,35,060 கோடியாக இருந்தது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ₹ 1,38,850 கோடி செலவானது.

இந்த ஆண்டு பட்ஜெட் ஆவணங்களின்படி, சம்பளம் மற்றும் நிறுவனங்களின் பராமரிப்பு செலவுகளை உள்ளடக்கிய வருவாய் செலவினங்களுக்காக ₹ 2,33,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்துக்கு (சிவில்) ₹ 20,100 கோடி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக தனியாக ₹ 1,19,696 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

`இது ஒரு சிறந்த பட்ஜெட்’ என்று விவரித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , ``பாதுகாப்பு உள்பட பல துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஆர் & டி (R & D), ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கியது பாராட்டுக்குரிய நடவடிக்கை" என்று கூறினார்.

மேலும் , பாதுகாப்பு மூலதன கொள்முதலில், 68 சதவீதம் உள்நாட்டு தொழில்துறையில் இருந்து கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்படும் ' என்று சீதாராமன் அறிவித்ததை , ``இது உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்களை நிச்சயமாக உயர்த்தும்" என்று ட்வீட் செய்து, ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

நாடாளுமன்ற பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆயுதப் படைகளுக்கான உபகரணங்களில், இறக்குமதியைக் குறைப்பதற்கும், தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

Also Read: மத்திய பட்ஜெட் 2022 முக்கிய அம்சங்கள்; `இனி பிட்காயின் முதலீட்டுக்கு 30% வரி!'

மேலும் பேசிய அவர் , ``பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பட்ஜெட்டில் 25 சதவீதம், தொழில்துறை, ஸ்டார்ட் அப்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் SPV (சிறப்பு நோக்கத்திற்கான வாகனம்) மூலம் DRDO மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து, ராணுவ தளங்கள் , உபகரணங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை மேற்கொள்ளத் தனியார் தொழில்துறை ஊக்குவிக்கப்படும்" என்றும் நிதி அமைச்சர் அறிவித்தார்.



from Latest News

No comments