Breaking News

Doctor Vikatan: காரமான உணவுகள் சாப்பிட்டால் இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் வருமா?

காரமான மற்றும் அதிக சூடான உணவுகள் சாப்பிட்டால் அல்சர் வரும், அது பிற்காலத்தில் புற்றுநோயாக மாறும் என்பது உண்மையா?

- மனோஜ் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் வினோத்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.

``நீங்கள் கேட்டிருப்பது உண்மைதான். அதிக காரமான மற்றும் அதிக சூடான உணவுகளைச் சாப்பிடும்போது உணவுக்குழாய் அல்லது வயிறு தொடர்பான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிலருக்கு காபி, டீ உள்பட அனைத்து உணவுகளையும் ஆவி பறக்கும் சூட்டில் சாப்பிட்டால்தான் திருப்தி என்பார்கள். அப்படி அதிக சூடாகச் சாப்பிடும்போது உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள செல்கள் பாதிக்கப்படும். அது நாளடைவில் புற்றுநோய் செல்களாக மாறக்கூடும்.

Also Read: Doctor Vikatan: கொழுப்புக்கட்டிகள் புற்றுநோயாக மாறுமா?

அதே போன்றதுதான் அதிக காரமான உணவுகளைச் சாப்பிடுவதும். அதிக காரம் மட்டுமல்ல அதிக உப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டாலும் இரைப்பை மற்றும் குடல் தொடர்பான புற்றுநோய்க்கு வாய்ப்பு உண்டு.

தவிர அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்களை ஏற்படுத்தும் ஹெச்.பைலோரி என்ற பாக்டீரியாவை கண்டுபிடித்து சிகிச்சை கொடுக்காவிட்டால் அந்தக் கிருமியாலும் இரைப்பை மற்றும் குடல் தொடர்பான புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

Cancer

Also Read: Doctor Vikatan: கொரோனாவிலிருந்து மீண்டதும் அதிகரித்த களைப்பு, தூக்கம்; என்னதான் தீர்வு?

எனவே அல்சர் இருக்குமோ என சந்தேகப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி, தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளவும்.

என்றோ ஒருநாள் சூடாக, காரமாக சாப்பிடுவதில் தவறில்லை. அதையே தினசரி வாடிக்கையாக்கிக்கொள்ள வேண்டாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News

No comments