Breaking News

மாமியாரை அடித்துக்கொன்ற மருமகள்... போலீஸ் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை - சேலத்தில் அதிர்ச்சி

சேலம் இடைப்பாடி, தானமுத்தியூரைச் சேர்ந்த இருளப்பன் மனைவி தைலம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன் இருளப்பன் இறந்த நிலையில், தைலம்மாள் தனது இரண்டாவது மகன் மெய்வேல் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் தைலம்மாள் தங்களுடனே வீட்டில் தங்கியிருப்பது, மெய்வேலின் மனைவி செல்விக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தைலம்மாள்

மருமகள் செல்வி தன்னை கொடுமைப்படுத்துவது தெரிந்தும் வேறு வழியில்லாமல் தைலம்மாள் அவர்களுடன் வசித்து வந்துள்ளாராம். இந்நிலையில் நேற்று முந்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த செல்வி, தன் அருகில் இருந்த கட்டையை எடுத்து, மாமியாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதில், பலத்த காயமடைந்த தைலம்மாள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை கண்ட மெய்வேலின் அண்ணன் மகன் ஈஸ்வரன் தைலம்மாளை மீட்டு இடைப்பாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே தைலம்மாள் பரிதாபமாக இறந்துள்ளார்.

செல்வி

இச்சம்பவத்தை கேட்டறிந்த செல்வி போலீஸார் தன்னை கைது செய்து விடுவார்கள். தனக்கும் தனது குடும்பத்திற்கும் பெரும் அவமானம் ஏற்படும் என்று தனது வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொங்கணாபுரம் போலீஸாருக்கு தகவல் அளிக்க, சங்ககிரி டி.எஸ்.பி.,ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் வெங்கட்பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். சேலத்தில் மாமியாரைக் கொன்று மருமகளும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from Latest News

No comments