விழாவுக்கு அழைக்காத உறவினர் கத்தியால் குத்திக் கொலை - தருமபுரியில் நடந்த பயங்கரம்
தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் அந்த பகுதியில் ஃபேன்சி ஸ்டோர் நடத்திவருகிறார். இவருக்கு 13 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவரின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஈஸ்வரன் என்பவர் முனியப்பனின் உறவினர். ஈஸ்வரனும் அதே பகுதியைச் சேர்ந்தவர். இந்த இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
முனியப்பன் தனது மகளுக்குக் கடந்த சிலதினங்களுக்கு முன்பாக மஞ்சள் நீராட்டு விழா நடத்தியுள்ளார். இந்த விழாவுக்கு முனியப்பன் ஈஸ்வரனை அழைக்கவில்லை. தன்னை அழைக்காததினால் ஈஸ்வரன் கடும் கோபத்திலிருந்திருக்கிறார். இந்தநிலையில், நேற்று முந்தினம் இரவு அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவுக்கு வந்திருந்த முனியப்பனுக்கும், ஈஸ்வரனுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்த தகராறு ஒரு கட்டத்தில் சண்டையாக மாறியுள்ளது. அப்போது ஈஸ்வரன் முனியப்பனைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். படுகாயமடைந்த முனியப்பன் ரத்தவெள்ளத்தில் அங்கேயே விழுந்திருக்கிறார். இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இருந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சம்பவமறிந்து வந்த காவல்துறையின் வழக்கு பதிவு செய்து ஈஸ்வரனைக் கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். விழாவுக்கு அழைக்காத ஆத்திரத்தில் உறவினர் ஒருவர் தனது உறவினரையே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from Latest News
No comments