Breaking News

`அம்பானிக்கும், அதானிக்கும் லாபத்தை கொடுக்கவே சிலிண்டர் விலை உயர்வு' - கம்யூனிஸ்ட் காட்டம்

"விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. தேர்தல் செலவுக்கான பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெறுவதற்காகவே அம்பானிக்கும், அதானிக்கும் லாபத்தை உயர்த்திக்கொண்டே செல்கிறார் மோடி" என்று கொந்தளிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.1,068-க்கு விற்கப்படுகிறது. மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு அடித்தட்டு மக்களுக்கு விரோதமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரையிடம் பேசினோம். "பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து, தற்போது வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டரின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதற்குச் சமம். `பெட்ரோல், டீசல் விலை ரயில் வேகத்தில் உயர்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்லதுரை

சிலிண்டர் ராக்கெட் வேகத்தில் விலையை உயர்த்திக்கொண்டே செல்கிறது மத்திய அரசு’ என்று காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிலிருந்த போது அப்போதைய பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சொன்ன வார்த்தை இது. இப்போது அந்த கட்சியில் உள்ளவர்கள் வாய்திறக்கவில்லையே.

மோடி அரசு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் செலவுக்கான தொகையை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெறுவதற்காகவே அம்பானிக்கும், அதானிக்கும் லாபத்தை அதிகப்படுத்துவதற்காகவே விலை உயர்த்திக்கொண்டே செல்கிறது. ஒரு குடும்பத்திற்கு ஒரு சிலிண்டரும், அடுப்பும் தருகிறோம் எனக் கூறிய மோடி அரசு.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

செயல்படுத்திய திட்டத்தின் பயனாளிகள் அதனை முழுமையாகப் பயன்படுத்தும் முன்பாக வாங்கிய சிலிண்டர்களை திருப்பி ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் விலை உயர்வு பெண்கள் மத்தியில் வெறுப்பையே உண்டாக்குகிறது. வீட்டுக்கு வீடு சிலிண்டர் பயன்பாட்டை அதிகப்படுத்திவிட்டு விலையேற்றம் செய்வது எந்த விதத்தில் நியாயம். இதனைத் திரும்பப் பெறவேண்டும். இல்லையேல் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்றார் காட்டமாக.



from Latest News

No comments