Breaking News

கேரளா, பெங்களூருவுக்குக் கடத்தப்படும் கஞ்சா! - தேனியில் சிக்கிய 226 கிலோ

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய எல்லைச் சோதனைச் சாவடிகளைக் கடந்து, கேரளாவுக்குப் போதைப்பொருள்கள் கடத்தப்படுவது வழக்கம்.

வீரபாண்டியில் கைது செய்யப்பட்டவர்கள்.

அந்த வகையில், கேரளாவுக்குக் கடத்த இருந்த 80 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். தேனி அருகே உள்ள வீரபாண்டியில் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லோடு வாகனத்தை நிறுத்தினர். போலீஸாரைப் பார்த்ததும், வாகனத்தில் இருந்த ஒருவர் கீழே இறங்கி ஓடியதும், வாகனத்தை சுற்றிவளைத்த போலீஸார், வாகனத்தில் இருந்த மூவரைப் பிடித்தனர்.

விசாரணையில், தேனி கூடலூரைச் சேர்ந்த நவீன்குமார் (வயது 30), கேரளாவைச் சேர்ந்த பைசல் (வயது 24), ஸ்டார்வின் (வயது 28) ஆகியோர் என்றும், தப்பி ஓடியது சுரேஷ் என்பதும் தெரியவந்தது. வாகனத்தில் இருந்த 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கம்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள்

பிடிபட்ட மூவரிடமும் நடத்தப்பட்ட தேனி விசாரணையில் கூடலூரில் இருந்து தேனி வழியாக திண்டுக்கல் கொண்டு செல்லப்படும் கஞ்சா, அங்கிருந்து பெங்களூரு கடத்த இருந்தது தெரிந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Also Read: இன்ஜினீயரிங் கல்லூரி... ஐடி கம்பெனி... கஞ்சா நெட்வொர்க்... பாதை மாற்றிய போதைப் பயணம்!

இதேபோல, கம்பம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கம்பம் வடக்கு காவல்துறையினர், இருசக்கர வாகனம், பிக்கப் வாகனம், கார் ஆகியவற்றை சோதனை செய்ததில் மொத்தமாக, 176 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கம்பம் உலகத் தேவர் தெருவைச் சேர்ந்த வேல்முருகன்(வயது 45), விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த குபேந்திரன் (வயது 37) ஆகியோர் பிடிபட்டனர். மூவர் தப்பியோடினர்.

கஞ்சா

Also Read: கன்னியாகுமரி: கஞ்சா விவகாரத்தில் மோதல்! - நண்பரைக் கொன்று குளத்தில் வீசிய 2 பேர்

தப்பியோடியவர்கள் தொடர்பாக போலீஸார் விசாரித்ததில், கோம்பை ரோட்டைச் சேர்ந்த மலைச்சாமி, கண்ணன், உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த காளி என்கிற காளிராஜ் என்பது தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும், கஞ்சாவை, கேரளாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.



from Latest News

No comments