Breaking News

பொறியியல் படிப்பு தரவரிசைப்பட்டியல்: தேதி அறிவிப்பு

பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகின்ற 28 ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். நாளை வெளியாகும் என்ற நிலையில் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிப் பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் நம்பர் ஆகஸ்ட் 26ஆம் தேதி வழங்கப்பட்டது.

image

பின்னர் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இன்னும் சில மாணவர்கள் சரியாக சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கேட்டனர். மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட வேண்டிய தரவரிசைப் பட்டியல் 25ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் செப்டம்பர் 28ம்தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுவிட்டதா என்பதை www.tneaonline.org என்ற இணையதளத்தில் உறுதி செய்து கொள்ளலாம்.

 "இதுவும் கடந்து போகும்" தோல்வி குறித்து விராட் கோலி !

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

No comments