Breaking News

ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோமவாரம் 108 சங்காபிஷேக விழா                    

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடரங்கம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஜம்புகேஸ்வரர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடரங்கம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

பெருமை வாய்ந்த இக்கோயிலில் கார்த்திகை முதல் சோம வாரமான நேற்றிரவு ஆலயத்திற்கு முன்புறம் சிவலிங்க வடிவில் 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. சிறப்பு யாகம் முடிவுற்றதும் 108 சங்குகளில் உள்ள புனித நீரால் ஜம்புகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.மேலும் 27 மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. விழாவில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் முகக்கவசம் அணிந்து  கலந்து கொண்டனர்.

108 சங்காபிஷேக விழா.

ஆலய அர்ச்சகர் ரமேஷ் குருக்களிடம் பேசினோம்.

"மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்காபிஷேகம் விழாவினை நடத்தி வருகிறோம். சங்காபிஷேகத்தை நேரில் தரிசித்து அதன் புனித நீரை பிரசாதமாகப் பெற்று அருந்தினால் நாள்பட்ட தீராத வியாதிகள் தீரும்

 குழந்தை பாக்கியம் கிட்டும். ஹோம பூஜைக்குப்  பொருள்கள் வழங்கினால் பில்லி,சூனியம், ஏவல், மாந்திரீகம் இது போன்ற இடர்பாடுகளில் விடுபட்டு  சுபிட்சமான வாழ்வு பெறலாம்" என்றார்.



from Latest News

No comments