Breaking News

21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது! - காங்கேசன் துறைமுகத்தில் விசாரணை

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேர், 2 விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையில், பருத்தித்துறை கடற்பரப்பிற்கு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்கள் 9 விசைப்படைகளில் வந்து தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு விரைந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்துள்ளதாகக் கூறி, தமிழக மீனவர்கள் 21 பேரையும், 2 விசைப்படகையும் கைப்பற்றி கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இலங்கை கடற்படை

இந்த விசாரணையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படட தமிழக மீனவர்கள் 21 பேர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. முன்னதாக நேற்றுமுதல் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை கைப்பற்றி அவர்களை கைது செய்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் இல்லையா?



from Latest News

No comments