5 நாள்கள் போராட்டம்; கூண்டின் மீது நின்று துரிதமாக செயல்பட்ட வனத்துறை! - கோவை சிறுத்தை சிக்கியது
கோவை மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒரு சிறுத்தை நடமாடி வந்தது. குடியிருப்புப் பகுதிக்கு வரும் அந்த சிறுத்தை 10-க்கும் மேற்பட்ட நாய்கள், கால்நடைகளை வேட்டையாடியிருந்தது. இதனால், பொது மக்கள் அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
Also Read: 4 கேமராக்கள்.. 2 கூண்டுகள்.. அசராத கோவை சிறுத்தை! - விடாமல் துரத்தும் வனத்துறை
இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த சிறுத்தையைப் பிடிப்பதற்கு வனத்துறை ஆங்காங்கே கூண்டுகளை வைத்தது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை குனியமுத்தூர் பகுதி அருகே உள்ள ஒரு குடோனில் பதுங்கியது. தகவல் அறிந்து விரைந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கினர். இரண்டு கூண்டுகள் வைத்தும், குடோனை சுற்றி வலை விரித்தனர்.
சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. ஆனாலும், கடந்த 5 நாள்களாக சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. சிறுத்தை கூண்டில் சிக்கும் வரை வனத்துறை பொறுமையாக காத்திருந்தனர்.
கிட்டத்தட்ட 5 நாள்களாக உணவு, தண்ணீர் இல்லாததால் சிறுத்தை சற்று சோர்ந்துவிட்டது. இதையடுத்து, நள்ளிரவு உணவுக்காக குடோனில் இருந்து வெளியேற முயன்றது. அப்போது வாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கிக் கொண்டது. ``அது தானாக மூடும் கூண்டு. இருந்தாலும், அதுவரை காத்திருக்காமல் கூண்டின் மீது நின்று எங்கள் ஊழியர்கள் கூண்டின் கதவை மூடிவிட்டனர்.
சிறுத்தை ஆரோக்கியமாக உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு உணவு ஏற்பாடு செய்துள்ளோம். சிறுத்தையை வனப்பகுதியில் விடஉள்ளோம்.” என்று வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
from Latest News
No comments