Breaking News

குறைந்து வரும் கொரோனா தொற்று... நீட்டிக்கப்படுமா இரவு நேர ஊரடங்கு? - முதல்வர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையானது 31 ஆயிரம் என அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது கடந்த சில நாள்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிறிய அளவில் குறைந்த வண்ணம் உள்ளது. எனினும் கொரோனா தொற்றால் தினசரி இறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரும் நாள்களில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. முன்னதாக, தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் குறையும் பட்சத்தில் ஞாயிறு முழு ஊரடங்கை விலக்கிக்கொள்ளலாம் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரித்திருந்தார்.

இரவு நேர ஊரடங்கு

இந்த நிலையில் ஏற்கனவே ஜனவரி 31 வரை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், கடந்த சில தினங்களாகக் குறைந்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, 31-ஆம் தேதிக்குப் பிறகு இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை(ஜனவரி 27) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கவுள்ளனர். நாளை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகலாம். மேலும் வரும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் தகவல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ``கொரோனா தொற்று குறைந்தால் எந்த ஊரடங்கும் தேவையில்லை!'' - மா.சுப்பிரமணியன்



from Latest News

No comments