Breaking News

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மற்றும் ஜப்பானின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) தலைவர் ஷின்சோ அபே. இவர் மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென கீழே சரிந்தார். உடனே அவரது பாதுகாவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கீழே விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் முன்னாள் பிரதமர்ஷின்சோ அபே

ஆனால், ஜப்பானின் பிரபல செய்தி நிறுவனமான NHK அவர் சுடப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில்,"ஜப்பானின் முன்னாள் பிரதமர் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது ஒரு துப்பாக்கி சப்தத்தை நமது செய்தி நிருபர் கேட்டுள்ளார். அதன் பிறகே முன்னாள் பிரதமர் கீழே சரிந்தார். மேலும் ஷின்சோ அபே-க்கு ரத்த போக்கும் இருந்தது. எனவே அவர் சுடப்பட்டுள்ளார்" என குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே துப்பாக்கியால் சுடப்பட்ட ஷின்சோ அபே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு தகவல் வரும் நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.



from Latest News

No comments